மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, வினாடிக்கு 36,162 கன அடியில் இருந்து, 32,982 கன அடியாக குறைந்துள்ளது.;
மேட்டூர் அணையின் நீர்மட்டம், காலை 8 மணி நிலவரப்படி, 107.18 அடியாக உள்ளது. நீர்இருப்பு 74.46 டி.எம்.சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 36,162 கன அடியில் இருந்து, 32,982 கன அடியாக குறைந்துள்ளது.
டெல்டா பாசன தேவைக்காக, அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக, வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.