மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16,231 கன அடியாக அதிகரிப்பு

சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16,231 கன அடியாக அதிகரித்துள்ளது.

Update: 2021-10-17 04:00 GMT

கோப்பு படம்

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி, 89.00 அடியிலிருந்து, 90.17 அடியாக உயர்ந்தது. அணையின் நீர்இருப்பு  51.51 டி.எம்.சி-யில் இருந்து 52.84 டி.எம்.சி யாக அதிகரித்துள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 11,099 கன அடியில் இருந்து, 16,231 கன அடியாக அதிகரித்துள்ளது.

டெல்டா பாசன தேவைக்காக, அணையில் இருந்து வினாடிக்கு  100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக, வினாடிக்கு 550 கன அடி  தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News