மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,875 கன அடியாக அதிகரிப்பு
சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,875 கன அடியாக அதிகரித்துள்ளது.;
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி, 73.67 அடியாகவும், நீர்இருப்பு 35.93 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து, வினாடிக்கு 7,051 கன அடியில் இருந்தது 9,875 கன அடியாக அதிகரித்துள்ளது.
டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 7,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.