மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7051 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7051 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Update: 2021-09-27 03:15 GMT

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி, 73.49 அடியாகவும், நீர் இருப்பு  35.77 டி.எம்.சியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு  6,831 கன அடியில் இருந்தது 7,051  கன அடியாக அதிகரித்துள்ளது.

டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு  7,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 800 கன அடி  தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News