மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிவு
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து, 9,561 கன அடியிலிருந்தது 8,092 கன அடியாக குறைந்துள்ளது.;
கோப்பு படம்
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி, 73.69 அடியாக உள்ளது. அணையில் நீர்இருப்பு 35.95 டி.எம்.சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து, வினாடிக்கு 9,561 கன அடியில் இருந்தது 8,092 கன அடியாக குறைந்துள்ளது.
டெல்டா பாசன தேவைக்காக, அணையில் இருந்து வினாடிக்கு 7,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.