மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 11,124 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி 11,124 கன அடியாக அதிகரித்துள்ளது.

Update: 2021-09-22 02:45 GMT

கோப்பு படம் 

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8:00 மணி நிலவரப்படி, 73.37 அடி ஆக இருந்தது. அணையின் நீர்இருப்பு :35.66 டி.எம்.சி ஆகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,530 கன அடியில் இருந்தது இன்று 11,124  கன அடியாக  அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பாசன தேவைக்காக, வினாடிக்கு  7,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 800 கன அடி  தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News