மேட்டூர் அணை நீர்மட்டம் 74.18 அடி

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 74.18 அடியாக இருந்தது.

Update: 2021-09-16 03:00 GMT

கோப்பு படம்

சேலம் மாவட்டம்,  மேட்டூர் அணையின் நீர்மட்டம்,  இன்று காலை 8 மணி நிலவரப்படி 74.18 அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்இருப்பு  36.40 டி.எம்.சியாக  சரிந்துள்ளது.

அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு  9,750 கன அடியில் இருந்தது 11,521 கன அடியாக  அதிகரித்துள்ளது.  டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு  16,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அதேபோல், அணையில் இருந்து கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 750 கன அடி  தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மழை அளவு 7.00 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News