மேட்டூர் அணை நீர்மட்டம் 75.36 அடியாக குறைந்தது
மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை நிலவரப்படி, 75.36 அடியாக குறைந்தது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி, 75.36 அடியாக குறைந்துள்ளது. நீர்இருப்பு : 37.48 டி.எம்.சியாக சரிந்துள்ளது. அணைக்கு நீர் வரத்து, வினாடிக்கு 10,566 கன அடியில் இருந்தது 9,483 கன அடியாக குறைந்துள்ளது.
அணையில் இருந்து டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 16,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக, வினாடிக்கு 750 கன அடி தண்ணீர் வெளியேற்றப் பட்டு வருகிறது.