பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
காவிரி டெல்டா பாசனத்திற்காக, மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு.;
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு. மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது, 88.610 அடியாக உள்ளது. நீர்இருப்பு : 51.078 டி.எம்.சி. ஆக உள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 5,455 கன அடியாக உள்ளது.
நீர்வெளியேற்றம், டெல்டா பாசனத் தேவைக்காக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் , இன்று மாலை 4 மணி முதல், டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.