மேட்டூர் அணைக்கு நீரவரத்து அதிகரிப்பால் டெல்டாபாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் டெல்டாபாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் இன்று காலை காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் : 72.61 அடியிலிருந்து 73.29 அடியாக உயர்ந்துள்ளது. நீர்இருப்பு : 35.59 டி.எம்.சியாக உள்ளது.
அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 12,804 கன அடியிலிருந்து 16,301 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் டெல்டா பாசனத் தேவைக்காக வினாடிக்கு 5000 கன அடி நீர் வெளியேயேற்றப்பட்டு வந்த நிலையில் தற்போது 12,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.