மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 25 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நண்பகல் 2 மணி முதல் 25 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேட்டூர் அணையின் இன்று நண்பகல் 2 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 95.100 அடியாகவும், நீர்இருப்பு 58.67 டி.எம்.சியாகவும் உள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 13,477 கனஅடியாக இருந்த நிலையில் நண்பகல் 2 மணி முதல் 25 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 550 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.