மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 400 கன அடி தண்ணீர் திறப்பு
மேட்டூர் அணை இன்று காலை 8 மணி நிலவரப்படி, நீர்மட்டம் : 114.46 அடியாகவும், நீர்இருப்பு : 84.91 டி.எம்.சியாகவும் உள்ளது.
மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு.
மேட்டூர் அணை இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் : 114.46 அடியாகவும், நீர்இருப்பு : 84.91 டி.எம்.சியாகவும் உள்ளது. அணைக்கு நீர் வரத்து : வினாடிக்கு 11,772 கன அடியிலிருந்து, 15,740 கன அடியாக அதிகரித்துள்ளது.
டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.