மேட்டூர்அணை: ரூ.1.50 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட மீன்வலை பறிமுதல்

மேட்டூர் அணையில், ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட மீன் வலைகளை, மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-07-16 15:30 GMT

மேட்டூர் அணையில், தடை செய்யப்பட்ட மீன் வலைகளை மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதிகளான செட்டிப்பட்டி, கோட்டையூர், பண்ணவாடி உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட வலைகளை கொண்டு மீன்கள் பிடிக்கப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து,  மேட்டூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் உத்தரவின்பேரில்,  துணை ஆய்வாளர் கவிதா (ஆய்வாளர் பொறுப்பு) தலைமையில் விசைப்படகு மூலம் அதிகாரிகள் அங்கு சென்றனர். அப்போது,  அதிகாரிகளை கண்டதும் வலைகளை தண்ணீரில் அப்படியே விட்டுவிட்டு மீனவர்கள் பரிசல் மூலம் தப்பிச் சென்றனர்.

இதனை அடுத்து மீனவர்கள் விட்டுச்சென்ற 400 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட வலையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றை மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். அவற்றின் ரூ. 1,50,000 மதிப்பு இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News