என் மீது பாெய் புகார்: சேலம் பாமக நிர்வாகி கலெக்டரிடம் முறையீடு
நங்கவள்ளி ஒன்றிய பாமக தலைவர் தன்மீது அவதுாறு பரப்பிய மூதாட்டி மற்றும் அவருடைய 2 மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நங்கவள்ளியை சேர்ந்த பார்வதி என்ற மூதாட்டி தனது இரண்டு மகன்களுடன் கடந்த 9ஆம் தேதி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தனது 5 அடி நீளமுள்ள வழித்தட நிலத்தை நங்கவள்ளி ஒன்றிய பாமக தலைவர் பானுமதி மற்றும் அவரது கணவர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் மீது புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் நங்கவள்ளி ஒன்றிய பாமக தலைவர் தன்மீது அவதூறு பரப்ப பொய் புகார் அளித்த மூதாட்டி பார்வதி மற்றும் அவருடைய இரண்டு மகன்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தார்.
இது குறித்து பானுமதி கூறும்போது, நிலம் தொடர்பான பிரச்சினை எழுந்தபோது சட்டப்படி நிலத்தை அளந்து பொது வழித்தடம் என்பதை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்து பொய்யான புகார்கள் அளித்ததாக கூறினர். இது எடுத்து மறுபடியும் கடந்த புதன்கிழமையன்று முறையாக காவல்துறையினர் பாதுகாப்புடன் நிலம் அளக்கப்பட்டு நத்தம் புறம்போக்கு என்பது உறுதி செய்யப்பட்டது.
அதற்கான ஆவணத்தை இன்றைய தினம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கியுள்ளதாக கூறிய அவர், தன்மீது அவதூறு பரப்பிய பார்வதி மற்றும் அவரது இரண்டு மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.