மேட்டூரில் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

மேட்டூரில் திமுக அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம். செல்வகணபதி தலைமையில் நடைபெற்றது.;

Update: 2022-02-13 10:15 GMT

மேட்டூரில் நடைபெற்ற திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம் .

மேட்டூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திமுக, வினர் 25 வார்டுகளிலும், கூட்டணி கட்சியினர் 5 வார்டிலும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் இன்று 30 வார்டுகளில் போட்டியிடும் திமுக அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்ட திமுக,பொறுப்பாளர் டி.எம். செல்வகணபதி தலைமை வகித்தார். இதில் பேசிய டி.எம் செல்வகணபதி அனைவரும் ஒற்றுமையாக இருந்து வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யவேண்டுமென கேட்டுக்கொண்டார்.

மேலும் தலைவர் தளபதியார் கூறியது போல தமிழகத்தில் உள்ளாட்சியிலும் நல்லாட்சி அமையும் என்பது போல நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முழுமையான வெற்றி கிடைக்கும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News