மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்டம், வெளியேற்ற நிலவரங்கள் வெளியீடு
மேட்டூர் அணையின் இன்றை நீர்மட்டம், வெளியேற்றம் குறித்த நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.
மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி, நீர்மட்டம் 67.23 அடியாகவும், நீர்இருப்பு 30.36 டி.எம்.சியாகவும் உள்ளது.
அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 11,456 கன அடியிலிருந்து 13,296 கன அடியாக அதிரித்துள்ளது. டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 6,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 650 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.