மேட்டூர் அணை உபரிநீர் நீரேற்று தலைமை நிலைய கட்டுமானப்பணி- கலெக்டர் ஆய்வு

மேட்டூர் அணை உபரிநீர் நீரேற்று தலைமை நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணியை, சேலம் கலெக்டர் கார்மேகம் இன்று பார்வையிட்டார்.

Update: 2021-06-10 09:01 GMT

மேட்டூர் அணை உபரிரீ நீரேற்று தலைமை நிலைய கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் கார்மேகம்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து உபரியாக கடலில் கலக்கும் தண்ணீரை, 100 ஏரிகளுக்கு நிரப்ப, கடந்த ஆட்சி காலத்தில் திட்டம் தொடங்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் வறண்ட ஏரிகளுக்கு இந்த உபரி நீர் திட்டம் மூலமாக தண்ணீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு,  அதற்கான கட்டுமானப்பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.

அதன்படி, மேட்டூர் அணை அருகே உள்ள திப்பம்பட்டி என்ற பகுதியில், உபரிநீர் நீரேற்று தலைமை நிலையம் அமைப்பதற்கான கட்டுமான பணி தொடங்கி, தற்போது 50 விழுக்காடு அளவிற்கு நிறைவடைந்துள்ளது. இந்த திட்டப்பணிகளை, சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் நேரில் சென்று பார்வையிட்டார்.

கட்டுமானப்பணிகள் நிறைவடைந்து 100 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல இணைப்பை ஏற்படுத்தி, உபரி நீரை கொண்டு சென்றால்,  பல லட்சம் ஏக்கர் அளவிலான விவசாய நிலங்கள் பயன் பெறுவதோடு, அப்பகுதிகளில் நிலத்தடி நீர் வேகமாக உயரும் என்று, பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

Similar News