மேட்டூர் அணை நீர்மட்டம் 50.78 அடியாக சரிவு..!
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கட்கிழமை (மே.13) இன்று காலை 8 மணி நிலவரப்படி 50.78 அடியாக சரிந்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கட்கிழமை (மே.13) இன்று காலை 8 மணி நிலவரப்படி 50.78 அடியாக சரிந்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழைப்பொழிவு இல்லாததால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து சரிந்த வண்ணமாக உள்ளது. இந்நிலையில், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 1,000 கன அடியாக உள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று (மே.12) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 33 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (மே.13) திங்கட்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 57 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேலும், அணைக்கு வரும் நீர்வரத்தைக் காட்டிலும் நீர் திறப்பு பல மடங்கு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று 51.00 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று 50.78 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 18.30 டிஎம்சியாக உள்ளது.