மேட்டூர் அணை நீர்வரத்து 138 கன அடியாக அதிகரிப்பு
சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 57 கன அடியிலிருந்து 138 கன அடியாக அதிகரித்துள்ளது.;
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 57 கன அடியிலிருந்து 138 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக சரிந்திருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக, ஒகேனக்கல் காவிரியில் 300 கன அடியாக இருந்த நீர் வரத்து, நேற்று வினாடிக்கு 1,200 கன அடியாக அதிகரித்தது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 57 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 8 மணி நிலவரப்படி 138 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்தை காட்டிலும் திறப்பு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்த வண்ணம் உள்ளது. நேற்று 50.78 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று 50.57 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 18.17 டிஎம்சியாக உள்ளது.