சேலம் காவல் நிலையங்களில் வசூல் வேட்டை: பட்டியல் வெளியிட்டு எஸ்.பி., எச்சரிக்கை

காவல் நிலையங்களில் பணம் வசூலித்த பட்டியலை வெளியிட்டு சேலம் மாவட்ட எஸ்பி ஸ்ரீ அபிநவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.;

Update: 2021-10-16 08:15 GMT

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ்.

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் சேலம் மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பணியாற்றும் எழுத்தர் உட்பட காவல் ஆய்வாளர் வரையில் எந்த எந்த சட்ட விரோத செயல்களுக்கு எவ்வளவு பணம் பெறுகிறார்கள், இந்த அனுமதி வழங்குவதற்கு பணம் லஞ்சமாக பெறப்படுகிறது என்பது குறித்து பட்டியலில் இணைத்துள்ளார்.

குறிப்பாக ஓட்டுனர் உரிமம் பாஸ்போர்ட் ஆகியவற்றை வழங்க ஆட்சேபம் இல்லை என்ற சான்றிதழ் வழங்குவதற்கு எழுத்தர் ஒருவருக்கு 500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரையும் லஞ்சம் பெறுகிறார்கள்.

மேலும் லாட்டரி விற்பனை, சந்துக்கடை எனப்படும் சட்டவிரோத மதுபான விற்பனை, சூதாட்டம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கு தலைமை காவலர்கள், உதவி ஆய்வாளர்கள், காவல் ஆய்வாளர்கள் என ஒவ்வொருவரும்  எவ்வளவு லஞ்சம் பெறுகிறார்கள் என்றும் சேலம் மாவட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீ அபிநவ் காவல் நிலையங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது காவல்துறையினரிடையே  சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து இதுபோன்ற பணம் வசூல் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபுநவ் எச்சரித்துள்ளார்.



 


Tags:    

Similar News