சேலம் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

தொடர் மழை காரணமாக சேலம் மாவட்டத்தில் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-08 03:00 GMT

மாவட்ட ஆட்சியர் கார்மேகம்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து காணப்படுவதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

இதனையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவித்துள்ளார். 

Tags:    

Similar News