வாரச்சந்தைக்கு தடை: மாற்று இடத்தில் விற்பனைக்காக ஒன்று கூடிய விவசாயிகள்

கொங்கணாபுரம் சனிக்கிழமை வாரச்சந்தைக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்ததால் மாற்று இடத்தில் ஆடுகள் விற்பனைக்காக ஒன்று கூடிய விவசாயிகள்.

Update: 2021-08-21 06:00 GMT

ஆடு விற்பனைக்காக மாற்று இடத்தில் கூடிய விவசாயிகள்.

கொரோனா தொற்று காரணமாக சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் வாரசந்தைக்கு  மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தடை விதித்திருந்தார். இந்நிலையில், தொடர்ந்து நான்கு வாரமாக கொங்கணாபுரம் சனிக்கிழமைகளில் சந்தை கூடாததால் இதனை நம்பியிருந்த எடப்பாடி தாலுக்காவிற்குட்பட்ட  விவசாயிகள் 100க்கணக்கானோர் தாங்கள் வளர்த்த வந்த ஆடு, கோழிகளை விற்க முடியாமல் தவித்து வந்தனர். 

இந்நிலையில் இன்று சனிக்கிழமை வாரச்சந்தைகூடாததால், அனைத்து விவசாயிகளும் ஒன்று கூடி முடிவெடுத்து கொங்கணாபுரம் அடுத்த சாணாரப்பட்டி காட்டுப்பகுதியில் தற்காலிக ஆட்டு சந்தையை கூட்டி தாங்கள் வளர்த்த ஆடு கோழிகளை விற்பனை செய்து வருகின்றனர்.  இந்நிலையில் விவசாயிகள் கூட்டிய தற்காலிக ஆட்டு சந்தையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடு, கோழிகளை விற்பனை செய்தும், வாங்கியும் சென்றனர்.


Tags:    

Similar News