மறைந்த வீரபாண்டி ராஜாவுக்கு எடப்பாடி நகர திமுக சார்பில் அஞ்சலி
மறைந்த வீரபாண்டி ராஜாவுக்கு எடப்பாடி பஸ் நிலையம் எதிரே நகர திமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.;
மறைந்த வீரபாண்டி ராஜாவுக்கு எடப்பாடி பஸ் நிலையம் எதிரே நகர திமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
சேலம் மாவட்டம், வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகன் முன்னாள் வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினரும் தற்போதைய திமுக மாநில தேர்தல் பணிக்குழு செயலாளருமான வீரபாண்டி ஆ.ராஜா இன்று காலை மாரடைப்பால் காலமானார்.
அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக எடப்பாடி பஸ் நிலையம் எதிரே வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு எடப்பாடி நகர திமுக சார்பாக மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.