எடப்பாடியில் பூச்சி தாக்குதலை தடுக்க வேளாண்மைதுறை விஞ்ஞானிகள் ஆய்வு

சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டாரத்தில் மாவு பூச்சி தாக்குதலை கட்டுபடுத்த தமிழ்நாடு வேளாண்மைதுறை விஞ்ஞானிகள் ஆய்வு மேற்க்கொண்டனர்.

Update: 2021-08-05 13:15 GMT

எடப்பாடியில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண்மைதுறை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டாரத்தில் மாவு பூச்சி தாக்குதலை கட்டுபடுத்த தமிழ்நாடு வேளாண்மைதுறை விஞ்ஞானிகள் ஆய்வு மேற்க்கொண்டனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டாரத்தில் கரட்டுக்காடு, வெள்ளரி வெள்ளி ஆகிய பகுதிகளில் 2272 ஏக்கர் நிலபரப்பளவில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது இப்பகுதிகளில் மாவு பூச்சி தாக்குதல் அதிகரித்துள்ளது. மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த எப்பாடி வட்டார தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் அனுஷா தலைமையிலான தோட்டகலை துறை அலுவலளர்கள் தடுப்பு பணியில் ஈடுபட்டுவந்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எடப்பாடி வட்டாரத்திலுள்ள சின்னமலணி  கிராமம் கரட்டுக்காடு மற்றும் வெள்ளரி வெள்ளி கிராமங்களில் உள்ள மாவு பூச்சி தாக்குதலுக்கு உள்ளான மரவள்ளி செடிகளை மாவு பூச்சி தாக்குதலிலிருந்து  கட்டுப்படுத்த தோட்டகலை துறை அலுவலர்களின் பரிந்துரையின் பேரில் மருந்துகளைத் தெளித்தும் மாவு பூச்சி தாக்குதலில் இருந்து விடுபட்ட செடிகளையும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக  இயக்குனர்கள் மற்றும் பூச்சியில் துறை மற்றும் ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் ஆகியோர் செடிகளை ஆய்வுசெய்து மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை விவசாயிகளிடம் எடுத்துக் கூறினர்.

Tags:    

Similar News