சிலம்பப் போட்டியில் முதலிடம் வென்ற சேலம் மாவட்ட வீரர்களுக்கு பாராட்டு விழா
சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் முதலிடம் வென்ற சேலம் மாவட்ட அணி வீரர்களுக்கு பாராட்டு விழா எடுத்த கிராம மக்கள்
எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னையில் எம்ஜிஆரின் ராமாவரம் இல்லத்தில் கடந்த 27.02.2022 அன்று மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 1500க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இதில் சேலம் வட்டமுத்தாம்பட்டி கிராமத்தில் இருந்து உலக சிலம்பம் விளையாட்டு கழகம் சார்பில் 50 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். குழு போட்டி மற்றும் தனிதிறன் போட்டி நடைபெற்றது. இதில் சிலம்பம் சிலம்பம்குழு போட்டியில் சேலம் மாவட்டம் பெண்கள் அணியினர் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர். மேலும் தனித்திறன் போட்டியில் 25 நபர்கள் முதலிடத்திலும், 15 நபர்கள் இரண்டாம் இடத்தையும், பத்து நபர்கள் மூன்றாம் இடத்தையும் பிடித்துஅனைவரும் வெற்றி பெற்றனர்.
இந்த நிலையில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு வட்டமுத்தாம்பட்டி கிராம மக்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் அவர்களை வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.