எடப்பாடி பஸ் நிலையத்தை சுற்றியுள்ள அக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
எடப்பாடி பஸ் நிலையம் அதனைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றி நகராட்சி ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி புதிய ஆணையாளராக பள்ளியபாளையத்தில் நகராட்சியில் ஆணையராக பணிபுரிந்த சரவணன் இடமாற்றம் செய்யப்பட்டு, இரு தினங்களுக்கு முன்பு எடப்பாடி நகராட்சியில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிலையில் எடப்பாடி பஸ் நிலையம் அதனைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வந்த புகாரின் பேரில் இன்று பஸ் நிலைய பகுதி கடைகளுக்கு நேரடியாகச் சென்று ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி நடவடிக்கை மேற்கொண்டார்.
அப்போது பஸ் நிலையம் ஓரங்களில் சிறு கடை வைத்திருக்கும் வியாபாரிகள் மற்றும் பெண்கள் இந்த அதிரடி நடவடிக்கையால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆணையரிடம் முறையிட்டனர். அதற்கு புதிய ஆணையாளர் சரவணன் மாற்று ஏற்பாடுகள் செய்து தருவதாக கூறினார். அப்போது நகராட்சி அலுவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.