புரட்டாசி 3 வது சனிக்கிழமை: மூக்கரை நரசிம்ம பெருமாள் கோவிலில் பக்தர்கள் வழிபாடு

சேலம் மாவட்டம் எடப்பாடி மூக்கரை நரசிம்ம பெருமாள் கோவிலில் புரட்டாசி 3 வது சனிக்கிழமையில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.;

Update: 2021-10-02 09:15 GMT

ஸ்ரீ மூக்கரை நரசிம்ம பெருமாள்.

புரட்டாசி மாதம் சனிக்கிழமை ஸ்ரீ மூக்கரை நரசிம்ம பெருமாள் கோயிலில் திருக்கொடி ஏற்றப்படும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக முக்கிய கோயில் தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்கள் மட்டும் அர்ச்சகரைத் தவிர பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று புரட்டாசி மாதம் சனிக்கிழமை மூன்றாவது வாரம் என்பதால் எடப்பாடி ஸ்ரீ மூக்கரை நரசிம்ம பெருமாள் கோயிலில் காலை முதலே திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News