எடப்பாடி நகராட்சி பகுதிகளில் 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி பகுதிகளில் மியாவாக்கி முறையில் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டது.;
நகராட்சி ஆணையாளர் முருகன் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக எடப்பாடி நகர திமுக செயலாளர் பாஷா கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான காலி இடங்களில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் எடப்பாடி, வெள்ளாண்டிவலசு பகுதியில் உள்ள குப்பைகளை கொட்டி மறுசுழற்ச்சி செய்யும் குப்பை கிடங்கில் சுற்றியுள்ள காலி இடங்களில் நகராட்சி சார்பில் மியாவாக்கி முறையில் மற்றும் அசோகர் கிரின் இந்தியா இணைந்து மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் முருகன் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக எடப்பாடி நகர திமுக செயலாளர் பாஷா கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.