எடப்பாடி வட்டாசியர் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
எடப்பாடி வட்டாசியர் அலுவலகம் முன்பு ரேஷன் அட்டை கேட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
எடப்பாடி வட்டாசியர் அலுவலகம் முன்பு ரேஷன் அட்டை கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரேஷன் அட்டை வழங்கக்கோரி தமிழக அரசிடம் வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதன் ஒரு பகுதியாக இன்று சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் தலைமையில் 20க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாற்றுத்திறனாளிகளை வறுமைக்கோட்டுக்கு கீழ் அறிவிக்கப்பட்டு மாதந்தோறும் 35 கிலோ அரிசி வழங்க வேண்டும் என கோசங்களை எழுப்பி, பின்னர் கோரிக்கை மனுவை எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலர் கோமதியிடம் வழங்கினர்.