எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோவில் இன்று பத்தர்கள் இன்றி வெறிச்சோடியது
எடப்பாடி ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவிலில் ஆடி அமாவாசை நாளான இன்று பத்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களும், பக்தர்கள் வழிபாட்டிக்கு திறக்கப்படாது என அறநிலையத்துறை அறிவித்துள்ள நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீநஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவில் நடை மூடப்பட்டு பக்தர் இன்றி சிறப்பு பூஜைக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டது.
இதனால் ஆடி அமாவாசை நாளான இன்று சுவாமியை தரிசிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றதுடன் கோவிலின் வாசலில் கற்பூரம் ஏற்றி விட்டு சென்றனர்.
விஷேச நாட்களில் ஆயிரக்கணகான பொதுமக்கள் வரும் ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவிலில் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி கானப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள பூக்கடை மற்றும் பழக்கடை வியாபாரிகள் என பலர் பெரும் ஏமாற்றும் அடைந்துள்ளனர்.