எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பருவ மழை கால முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம்
எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மழை காலங்களில் ஏற்படும் இயற்கை இடர்பாடுகள் கலைவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட பூலாம்பட்டி கோனேரிப்பட்டி, நெடுங்குளம் காவிரி கரையோர பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களில் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிந்து அதனை சரிசெய்வதற்கான நடவடிக்கையில் சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை, பேரூராட்சி, காவல்துறை, உள்ளாட்சித்துறை, வேளாண் துறை ஆகிய அனைத்து துறை அலுவலர்கள் கூட்டம் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் வேடியப்பன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பாதிப்புகள் எந்த பகுதியில் அதிகமாக ஏற்படும் என்பது குறித்தும் அதை ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து கலந்தாய்வு மேற்கொண்டு பாதிப்புகளை முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி வட்டாட்சியர் விமல் பிரகாசம் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.