எடப்பாடி அரசு மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை: டாக்டர்கள் சாதனை

எடப்பாடி அரசு மருத்துவமனையில் முதன்முறையாக முதியவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சையளித்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.;

Update: 2021-10-29 09:00 GMT

மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்ட முதியவருடன் மருத்துவர்கள்.

சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட வீரப்பம்பாளையத்தை சேர்ந்த பழனிசாமி(60) என்பவர் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார்.  கூலித்தொழிலாளியான பழனிசாமி எடப்பாடி அரசு மருத்துவமனையில்  ஆர்த்தோ மருத்துவர் முகமது ஜர்ஜி இமாம்  என்பவரை சந்தித்து மூட்டுவலி குறித்து ஆலோசனை கேட்டுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் நெடுமாறனுக்கு தகவல் தெரிவித்து, அவரது ஆலோசனைப்படி எடப்பாடி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஜெயக்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் முதன்முறையாக கூலித்தொழிலாளி பழனிசாமிக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை புரிந்துள்ளனர்.

இதுகுறித்து சிகிச்சை பெற்றுக்கொண்ட முதியவர் பழனிசாமி கூறும்போது, நான் ஒரு கூலித் தொழிலாளி என்றும் தன்னால் தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற முடியாத இந்த சூழ்நிலையில் அரசு மருத்துவமனையில்  முதலமைச்சர் காப்பீடு திட்டடத்தின் கீழ் இலவசமாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

Tags:    

Similar News