எடப்பாடி நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா துண்டு பிரசுரம் விநியோகம்

சேலம் எடப்பாடி நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

Update: 2021-09-28 09:30 GMT

துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்யும் நகராட்சி ஆணையர் திருநாவுக்கரசு.

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 75 ஆவது வருட சுதந்திர தினவிழா மற்றும் அக்டோபர் 2, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு  திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016ன் படி பிரதி வாரம் புதன்கிழமை தோறும் கழிவுகளை மட்டும் தனியாக பிரித்து வாங்கிடும் திட்டம் செயல்பட்டு வருகிறது.

தொடர்ந்து பொதுமக்கள் தங்களது இல்லங்களில் தினசரி சேர்க்கும் குப்பைகளை மக்கும் குப்பைகள் (ஈரமான கழிவுகள்) மற்றும் மக்காத குப்பைகள்  (உலர் கழிவுகள்) என தனித்தனியாக பிரித்து வழங்கிட வேண்டுமென வலியுறுத்தி,  நகராட்சி ஆணையர் திருநாவுக்கரசு தலைமையில் எடப்பாடி பஸ் நிலையம் பகுதிகளில் உள்ள கடைகளில் துண்டுப்பிரசுரங்களை ஒட்டியும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

Tags:    

Similar News