பொங்கல் தொகுப்பு ஊழலை திசை திருப்பவே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: எடப்பாடி பழனிச்சாமி

திமுக அரசு பொங்கல் தொகுப்பு ஊழலை திசை திருப்பவே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருவதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Update: 2022-01-20 10:30 GMT

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 ஒரு பொருள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு நியாய விலை கடை மூலமாக வழங்கினார்கள். ஆனால் அரசு அறிவித்தவாறு 21 பொருட்களும் வழங்கப்படவில்லை. வழங்கப்பட்ட பொருட்களும் தரமானதாக இல்லை. கொடுக்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் உள்ள பொருட்களின் எடை குறைவாகவே உள்ளது.

பொங்கல் தொகுப்பில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என்றும், பொங்கல் தொகுப்பில் 1300 கோடி கொள்முதல் செய்து 500 கோடி ரூபாய் வரை முறைகேடு செய்துள்ளனர் என்றும் குற்றம் சாட்டினார். மேலும் கரும்பு கொள்முதல் விலை தமிழக அரசு  33 ரூபாய் அறிவித்திருந்த நிலையில் கரும்புக்கு 16 ரூபாய் மட்டுமே வழங்குவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர் என தெரிவித்தார்.

தற்போது நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வரும் சூழ்நிலையில், தமிழக அரசு கொரோனா தொற்றுக்களை கட்டுப்படுத்த தவறிவிட்டதாகவும் தொற்று குறித்து சரியான முறையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்த்தப்படவில்லை என்றும், சேலத்தில் நேற்றைய தினம் 785 பேருக்கு  தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த திமுக அரசு சரியாக நிர்வாக திறன் இல்லாத அரசாக செயல்படுகிறது.

இதையெல்லாம் மறைப்பதற்கு இன்றைய தினம் தர்மபுரியில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்  வீடு மற்றும் உறவினர் கட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ரெய்டு நடத்தி மக்களை திசை திருப்பவே செய்கிறார்கள். மேலும் அதிமுகவை பழி வாங்க வேண்டுமென்றே திட்டமிட்டு,திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சி நிர்வாகிகள் மீதும் தொண்டர்கள் மீதும் பொய் வழக்கு போடுவதும் வேண்டும் என்று திட்டமிட்டு முன்னாள் அமைச்சர்கள் மீது வேண்டும் என்று திட்டமிட்டு அவதூறு செய்தியை பரப்பி லஞ்ச ஒழிப்பு காவல்துறை அவர்களைப் பயன்படுத்தி இன்றைக்கு இந்த ரெய்டு நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News