கொரோனா தடுப்பு பணி: குடிபோதையில் ரகளை செய்த தூய்மை பணியாளர்
கொரோனா தடுப்பு பணியின்போது குடிபோதையில் தகாத வார்த்தையில் திட்டி ரகளையில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி ஆணையர் உத்தரவின்பேரில் தினசரி எடப்பாடி பஸ் நிலையம் அருகே வாகனங்களில் வருபவர்களை நிறுத்தி கொரோனா பரிசோதனை செய்துவருகின்றனர்.
இதனை தொடர்ந்து இன்று எடப்பாடி பஸ் நிலையம் அருகே துப்புரவு அலுவலர் முருகன் துப்புரவு மற்றும் நகராட்சி பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது தூய்மை பணியாளர் (மலேரியா பிரிவு பணி) முருகேசன் என்பவர் குடித்துவிட்டு பணியில் ஈடுபட்டது மட்டுமில்லாம், பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த அதிகாரிகளிடம் பணி செய்யவிடாமல் தகாத வார்த்தைகளில் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனை அந்த வழியாக செல்பவர்கள் நின்று வேடிக்கை பார்த்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்படது. இத்தகவலறிந்து வந்த எடப்பாடி போலீசார் அங்கு ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்த தூய்மை பணியாளரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.