குடிநீர் வடிகால் வாரிய டெண்டரில் முறைகேடு; மறு டெண்டர்கோரி தர்ணாவில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்

எடப்பாடி குடிநீர் வடிகால் வாரிய டெண்டரில் முறைகேடு எனக்கூறி, மறு டெண்டர் காேரி ஒப்பந்ததாரர் தர்ணாவில் ஈடுபட்டார்.

Update: 2021-08-06 14:30 GMT

தர்ணாவில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்.

சேலம் மாவட்டம், எடப்பாடி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பு கோட்டத்தில் ஆண்டுதோறும் பராமரிப்பு பணிக்காக ஒப்பந்ததாரர்கள் மூலமாக டெண்டர் நடைபெறுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டிற்க்கான எடப்பாடி  கோட்டத்தில் உள்ள ராசிபுரம் கூட்டு குடிநீர் திட்டம், வீரபாண்டி இருப்பாளி கூட்டு குடிநீர் திட்டம், மேட்டூர் கூட்டு குடிநீர் திட்டம், சங்ககிரி கூட்டு குடிநீர் திட்டம் ஆகியவற்றின் பணிக்காக டெண்டர்இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

டெண்டர் போட்டு பணி செய்ய 30க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்த பணிக்கான  விவரங்களை அலுவலக வேலை நேரத்தில் இன்று கொடுத்தனர். அதில் குஞ்சாம்பாளையம் வெங்கட்ராமன் என்பவருடைய ஷெட்யூலை  உள்ளே பணியில் இருந்த மேற்பார்வை பொறியாளர் குணசேகரன் வாங்க மறுத்ததாகவும் மேலும் ஒப்பந்ததாரர்கள் அவரை  ஷெட்யூல் போட விடாமல் வெளியே தள்ளி வந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அதனால் கோபம் அடைந்த ஒப்பந்ததாரர் அலுவலகத்தின் முன்பு வெளியில் உட்கார்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

இது குறித்து வெங்கட்ராமன் கூறும்போது, டெண்டர் விவகாரத்தில் எடப்பாடி குடிநீர் வடிக் கால்வாரி பொறியாளர் ஒரு தலைபட்சமாக செயல்பட்டதாகவும், எடப்பாடி குடிநீர் வடிகால் வாரிய டெண்டரில் முறைகேடு நடந்துள்ளது. எனவே மறு டெண்டர் வைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News