கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்

எடப்பாடி நகர கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2021-08-16 11:15 GMT

 ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட எடப்பாடி நகர கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள்.

தமிழகம் முழுவதும் சுமார் 4350 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் சுமார் ௧௫௦ க்கும் மேற்பட்ட நகர கூட்டுறவு கடன் சங்கங்களும் இயங்கி வருகின்றன. அலுவலகப் பணியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பணி நிலையில் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது பணியாளர்கள் அனைவரும் பல்வேறு காரணங்களால் மிகுந்த மன உளைச்சலுடன் பணிபுரிந்து வருகின்றனர். இதனை தமிழக அரசு கவனத்திற்கு கொண்டு சேர்க்கும் வகையில் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாநிலம் தழுவிய அளவில் அனைத்து பணியாளர்களும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் எடப்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தின் முன்பு எடப்பாடி வட்டார தலைவர் செல்வராஜ் தலைமையில் பணியாளர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News