எடப்பாடி நகராட்சியில் தூய்மை பணி: மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சியில் தூய்மை பணி முகாமினை மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.;

Update: 2021-09-23 09:45 GMT
எடப்பாடி நகராட்சியில் தூய்மை பணி: மாவட்ட வருவாய் அலுவலர்  ஆய்வு

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சியில் நடைபெற்றுவரும் தூய்மை பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.

  • whatsapp icon

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கயிருப்பதை முன்னிட்டு எடப்பாடி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மழைநீர் வடிகால்களில் உள்ள படிவுகளை அகற்றும் பணிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று  எடப்பாடி நகராட்சி அலுவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் பஸ் நிலையம் அருகே சாலை ஓரங்களில் வடிகால்களில் உள்ள படிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் அலின்சுனேஜா இப்பணியினை பார்வையிட்டு இப்பணிகள் குறித்து  வட்டாட்சியர்  மற்றும் நகராட்சி ஆணையாளரிடம் கேட்டறிந்தார்.

Tags:    

Similar News