சேலத்தில் மின் இணைப்பு கொடுக்க லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது

விசைத்தறி கூடம் அமைப்பதற்கு புதிய மின் இணைப்பு பெற கூலித் தொழிலாளியிடம் நான்காயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்சார வாரிய உதவி பொறியாளர் மற்றும் புரோக்கர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-04-13 05:00 GMT

சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட கணியம்பாடி வெள்ளாளபுரம் பகுதியை சேர்ந்தவர் விசைத்தறி கூலி தொழிலாளியான சதீஷ்,இவர் விசைத்தறி கூடம் அமைக்க புதிய மின் இணைப்பு பெற தேக்கம்பட்டி மின்சார வாரிய அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கிருக்கும் அலுவலர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கூறியுள்ளனர்.

அதனடிப்படையில் கூலி தொழிலாளியான சதீஷ் தேக்கம்பட்டி பகுதியில் உள்ள ஆன்லைன் மையத்திற்கு சென்று மைய உரிமையாளரான வெங்கடாசலத்தை அணுகியுள்ளார்,

வெங்கடாஜலம் ஆன்லைனில் மின் இணைப்பு பெறுவதற்கு பதிவு செய்வதற்கு ஆயிரம் ரூபாய் பணம் கேட்டதாக தெரிய வருகிறது ஆயிரம் ரூபாய் பணம் கட்டி மின் இணைப்பு பெற பதிவு செய்த சதீஷ்,

தேக்கம்பட்டி மின்சார வாரிய அலுவலகத்தில் மின்சாரவாரியம் நிர்ணயித்த கட்டணம் ஆன புதிய மின் இணைப்பு பெறுவதற்காக 8368 ரூபாய் கட்டணம் செலுத்தி உள்ளார்.

இந்த நிலையில் சதீஷ் புதிய மின் இணைப்பு பெற மின்சார வாரிய உதவி பொறியாளர் குணசேகரனை அணுகியுள்ளார். அதற்கு குணசேகரன் கணக்கு பிரிவில் பணியாற்றும் ஏழுமலையிடம் சென்று கேட்குமாறு கூறி உள்ளார்,

கணக்குப் பிரிவு அலுவலர் ஏழுமலை புதிய மின் இணைப்பு பெற உதவி பொறியாளர் குணசேகரனுக்கு 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வழங்கவேண்டுமென ஏழுமலை கூறியுள்ளதாக தெரியவருகிறது.

இது குறித்து விசைத்தறி கூலி தொழிலாளியான சதீஷ் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்து அதன் அடிப்படையில் முதற்கட்டமாக தேக்கம்பட்டி மின்சார வாரிய உதவி பொறியாளர் குணசேகரன் மற்றும் கணக்குப் பிரிவு அலுவலர் ஏழுமலை ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு,

லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய நான்காயிரம் ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை சதீஷிடம் கொடுத்து அனுப்பி உள்ளனர் பணத்தை பெற்றுக்கொண்ட சதீஷ் உதவி பொறியாளர் குணசேகரனின் லஞ்ச பணத்தை கொடுக்க முற்பட்டுள்ளார் அப்பொழுது குணசேகர் அலுவலக வெளியிலுள்ள ஆன்லைன் மைய உரிமையாளர் வெங்கடாசலத்திடம் கொடுக்குமாறு கூறினார்

அதனடிப்படையில் கணக்குப் பிரிவு அலுவலர் ஏழுமலை துணையுடன் வெங்கடாசலத்திடம் பணம் கொடுக்கும் பொழுது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் புரோக்கர் வெங்கடாசலத்தை கையும் களவுமாக பிடித்தனர்

அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தேக்கம்பட்டி மின்சார வாரிய உதவி பொறியாளர் குணசேகரன் புரோக்கர் வெங்கடாஜலம் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட கணக்குப் பிரிவு மின்சார வாரிய அலுவலர் ஏழுமலை தப்பி ஓடினார்.

Tags:    

Similar News