எடப்பாடியில் தோட்டக்கலை துறை சார்பில், பூலாம்பட்டி சுற்று வட்டாரப்பகுதிகளில் மரவள்ளி கிழங்கு செடிகளில் மாவுபூச்சி தாக்குதல் அதிகரித்துள்ளது. இதையடுத்து, எடப்பாடி தோட்டகலை துறை உதவி இயக்குனர் அனுசா தலைமையில், தோட்டக்கலை துறை உதவி அலுவலர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பூச்சியல்துறை பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி பூச்சியல் ஆராய்ச்சி மாணவிகள் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்டம் பூலாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளான வன்னியர்நகர், பில்லுகுறிச்சி ஆகிய பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு செடிகளில் மாவுப்பூச்சி தாக்குதல் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த பீனாஸாகுயின் ஓமைட், புளோனிகாமைடு, தையாமீதாஜ்ஸோம், ஸ்பைரோடெட்ரா மேட், பூச்சிகொல்லி மருந்தினை விவசாயிகளுக்கு பரிந்துரைத்தனர்.