சேலத்தில் ஆயிரத்தை நெருங்கும் கொரோனோ பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 937 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு இல்லை. மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 1733 ஆக உள்ளது. மேலும் 394 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை சேலம் மாவட்டத்தில் 1,02,510 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மாவட்டத்தில், மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,08,492 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் 4,249 பேர் கொரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் பத்து சதவீதத்திற்கும் குறைவான படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் உள்ளனர். சேலம் மாவட்டத்தில் நேற்று 785 பேர் பாதிப்படைந்த நிலையில், தொடர்ந்து ஆயிரத்தை நெருங்கும் அளவில் நோய்த்தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. சேலம் மாவட்டத்தில் ஒமிக்ரான் நோய்க்கு இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.