சேலத்தில் இன்று ஒரே நாளில் 1080 பேருக்கு கொரோனா தொற்று
சேலத்தில் இன்று ஒரே நாளில் 1080 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் கொரோனோ தொற்றால் நேற்று 1009 பேர் பாதிப்புக்குள்ளாகிய நிலையில், இன்று ஒரே நாளில் புதிதாக 1080 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 1734 ஆக உள்ளது. மேலும் 726 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.
இதுவரை சேலம் மாவட்டத்தில் 1,03,745 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,10,649 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் 5,170 பேர் கொரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் பத்து சதவீதத்திற்கும் குறைவான படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் உள்ளனர்.