அருள்மிகு ஸ்ரீ சாய் ராகவேந்திரா ஆலய மஹா கும்பாபிஷேக விழா
ஆத்தூர் அருகே அருள்மிகு ஸ்ரீ சாய் ராகவேந்திரா ஆலய மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தாம்பாடியில் நன்மை அறக்கட்டளை மற்றும் நண்பர்கள் இணைந்து 5 லட்சம் மதிப்பீட்டில் அருள்மிகு ஸ்ரீ சாய் ராகவேந்திரா ஆலயம் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்தது. இதையொட்டி முகூர்த்த கால் நடப்பட்டு தீர்த்த குட ஊர்வலம் மற்றும் மஹாகணபதி ஹோமத்துடன் யாகசாலையில் பூஜைகள் தொடங்கி இரண்டாம் யாகசாலை பூஜை, ஜபம் ஹோமம் செய்யப்பட்டது. தொடர்ந்து புன்னிய ஸ்தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்த கலசங்களுக்கு பூஜை செய்யப்பட்ட பின்னர் புனிதநீரை அர்ச்சகர்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து கோபுர கலசத்தில் ஊற்றி மஹாகும்பாபிக்ஷேகம் செய்தனர்.
பின்னர் அருள்மிகு ஸ்ரீகணபதி, ஸ்ரீ சாய்பாபா, ஸ்ரீராகவேந்திரா ஆகிய மூர்த்திகளுக்கு அபிஷேகம், அர்ச்சனை தீபாராதனை செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர். மேலும் பகதர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.