லட்ச ரூபாய் காணிக்கை பணத்துடன் உண்டியலையே திருடிச்சென்ற மர்ம நபர்கள்

ஆத்தூர் அருகே மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து ஒரு லட்ச ரூபாய் காணிக்கை பணத்துடன் உண்டியலையே திருடிச்சென்ற மர்ம நபர்கள்.;

Update: 2022-01-04 12:15 GMT

சிவகங்கபுரம் கிராமத்தில் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சிவகங்கபுரம் கிராமத்தில் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரி இல்லாததால்   ஊர் பொதுமக்களே கோவிலில் மாரியம்மன் சுவாமிக்கு பூஜை செய்து வழிப்பட்டு வந்தனர். இதனிடையே புத்தாண்டு முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து விட்டு நேற்றிரவு கோவிலை ஊர்மக்கள் பூட்டி விட்டு சென்றனர். இன்று காலை மீண்டும் கோவில் திறந்து இருந்ததை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனார். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு  அங்கிருந்த  உண்டியலையே கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஆத்தூர் ஊரக காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கோவிலில் கடந்த "இரண்டு ஆண்டுகளாக உண்டியலில் இருந்த காணிக்கை பணம் மற்றும் நேற்று முன்தினம் புத்தாண்டு சிறப்பு தரிசன காணிக்கையை உண்டியல் திறந்து எடுக்காமல் இருந்துள்ளதால் இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சுமார் ஒரு லட்சரூபாய் மதிப்புள்ள காணிக்கை பணத்தை உண்டியலோடு கொள்ளையடித்து சென்றதும் தெரிய வந்தது.  மேலும் இரண்டு குத்து விளக்குகையும் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து தடையவியல் நிபுணர்களை வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து ஊரக போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News