"விவசாயி எனும் நான்" திரைப்படம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது

சேலம், ஆத்தூர் அருகே பி.கே.எஸ் தயாரிப்பில் விவசாயி எனும் நான் திரைப்படம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.

Update: 2022-02-13 10:12 GMT

ஆத்தூர் அருகே பி.கே.எஸ் தயாரிப்பில் விவசாயி எனும் நான் திரைப்பட படப்பிடிப்பு துவக்கம். 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அப்பமசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த தேமுதிக, ஒன்றிய செயலாளர் பச்சமுத்துவின்  பி.கே.எஸ் தயாரிப்பில் மின்னல் முருகன் இயக்கத்தில் விவசாயியை மையமாக கொண்டு உருவாக்கப்படும் விவசாயி எனும் நான் திரைப்படத்திற்கான பூஜை செல்லியம்பாளையம் மாரியம்மன் கோவிலில் படப்பிடிப்புடன் துவங்கியது.

 இந்த திரைப்படத்தில் தயாரிப்பாளருடைய மகனும் அறிமுக கதாநாயகனுமான பூவரசன், அறிமுக கதாநாயகியாக அட்சிக்தாவும் கதாநாயகனின் தந்தையாக நடிகர் சரவணனும் வில்லனாக வேலவன் ராமமூர்த்தி, ராஜசிம்மா ஆகியோர் நடிக்க உள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தின் முதல் காட்சி அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு நடிகர் சரவணன் குடும்பத்தோடு சுவாமி தரிசனத்திற்கு வரும் நிகழ்ச்சியோடு படப்பிடிப்பு துவங்கியது. இந்த படப்பிடிப்பு நிகழ்ச்சியை அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்ததோடு திரைப்பட நடிகர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News