ஆத்தூரில் திமுக அரசின் 100 நாள் சாதனை துண்டு பிரசுரங்களாக வழங்கல்
திமுக அரசின் 100 நாள் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களின் வீடு வீடாக சென்று வழங்கிய திமுக மாவட்ட செயலாளர்.
திமுக தலைவர் ஸ்டாலின் முதல் முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்பு தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்ததை அடுத்து ஸ்டாலின் அவர்களின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கும் விதமாக அக்கட்சியினர் வீடு வீடாக சென்று 100 நாள் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக சேலம் கிழக்கு மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சார்பில் ஒன்றிய கழக செயலாளர் டாக்டர் செழியன் தலைமையில் சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி அக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு சென்று திமுக அரசின் 100 நாள் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.