தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளித்து சுத்தப் படுத்திய சேலம் நகராட்சி நிர்வாகம்.

Update: 2021-05-19 09:45 GMT

தமிழகத்த்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது,கடந்த ஒரு வாரமாக தினசரி பாதிப்பு 33 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது, இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இன்னிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகர பகுதியிலும் 2வது அலை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது 350க்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்க்கு பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் ஆத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனோ பெரும் தொற்றால் தினசரி 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனோ தொற்று பரவலை தடுக்கும் விதமாக நரசிங்கபுரம் நகராட்சி ஆணையாளர் ஏற்பாட்டில் ஆத்தூர் தீயணைப்பு வாகனம் மூலம் மக்கள் அதிகம் கூடும் இடங்களான கடைவீதி,நீதிமன்ற வளாகம்,அம்மா உணவகம்,வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நரசிங்கபுரம் நகராட்சி அதிகாரிகள் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News