ஆத்தூர்: 50 படுக்கை வசதிகள் கொண்ட சிகிச்சை மையம் அமைப்பு

ஆத்தூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 50 படுக்கை வசதிகள் கொண்ட சிகிச்சை மையம் அமைப்பு. அடிப்படை வசதிகள் குறித்து வருவாய் கோட்டாட்சியர் நேரில் ஆய்வு.

Update: 2021-05-23 12:00 GMT

ஆத்தூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 50 படுக்கை வசதிகள் கொண்ட சிகிச்சை மையம் அமைப்பு. அடிப்படை வசதிகள் குறித்து வருவாய் கோட்டாட்சியர் நேரில் ஆய்வு. 

   கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசும் சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதோடு முழு ஊரடங்கை தமிழக அர்சு அமல்படுத்தியுள்ளது. ,இதனிடையே சேலம் மாவட்டம் ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு நேற்று ஒரு நாள் மட்டும் 124 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் தொற்று அறிகுறியுடன் சிடிஸ்கேன் எடுத்து வரும் நபர்களுக்கு மட்டும் தனியாக சிகிச்சை அளிப்பதற்காக அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 50 படுக்கை வசதிகள் கொண்ட சிகிச்சை மையத்தை சுகாதாரத்துறையினர் அமைத்துள்ளனர்.

இதனையடுத்து சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறித்து வருவாய் கோட்டாட்சியர் துரை நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வருவாய்த்துறயினர், சுகாதாரத்துறையினர், நகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News