ஆத்தூர் தனியார் விடுதியில் 160 மிக்சிகள் பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி

ஆத்தூர் தனியார் விடுதியில் ஆவணம் இன்றி பதுக்கிவைத்திருந்த ரூ.1.20 லட்சம் மதிப்பிலான 160 மிக்சிகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.;

Update: 2022-02-18 14:00 GMT

பறிமுதல் செய்யப்பட்ட மிக்சிகள்.

தமிழகத்தில் நாளை நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கடசியினர் வாக்காளர்களுக்கு பணமோ அல்லது பரிசுப்பொருட்கள் வழங்க தேர்தல் ஆணையம் தடை விதித்து அதனை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையை அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதனையடுத்து சேலம் மாவட்டம்,ஆத்தூர் பகுதியில்   தேர்தல் பறக்கும் படையினர் இரவு பகலாக ஆங்காங்கே கண்காணித்து வாகனங்களை சோதனை செய்து வருவதோடு தனியார் விடுதிகளும்  சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து ஆத்தூர் தனியார் விடுதியில் சோதனை மேற்கொண்டபோது,  ஆவணமின்றி வைத்திருத்த  1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 160 மிச்சிகள்  தேர்தல் அதிகாரி அன்புச் செழியன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் மீட்டு ஆத்தூர் நகராட்சி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் ஆவணமின்றி வைத்திருந்த உத்திரபிரதேசம் மாநிலம் ஈட்டா கிராமத்தைச் சேர்ந்த முகமது அஸ்லாம் மற்றும் அவருடன் இருந்த 10 நபர்களிடம் தேர்தலுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கவா அல்லது விற்பனைக்காவா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News