மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கால், கைகளை வழங்கிய கலெக்டர்
சேலத்தில் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8.03 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
சேலத்தில் 12மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8.03 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (07.11.2022) மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சிக்குப்பின் பேசிய மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் மனுக்கள் பெறப்பட்டு, அவை அனைத்தும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், இன்றுறைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 302 மனுக்கள் வரப்பெற்றன.
மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமின்றி மனுக்களை வழங்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளிடம் பெறப்படும் மனுக்களின் மீது, உரிய தீர்வுகள் காணப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இன்றைய தினம் மாற்றுத்திறனாளிகள் வழங்கிய 10 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்படும் தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கால்களும், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கைகளும் என மொத்தம் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8.03 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நலத்திட்ட உதவிகள் பெற்ற மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாழ்வில் மென்மேலும் முன்னேற இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் பயிற்சி ஆட்சியர் வாகா சங்கத் பல்வந்த், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் மயில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரா.மகிழ்நன் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.